Wednesday 28 January 2009

vanakkam

Monday 14 July 2008

enakkul ni
உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின்
துணை கொண்டு எழுதிய கவிதை இது
தயவு செய்து வாசித்துவிடாதே
உன் கண்ணீரை ஏந்தினால்
என்கவிதை இரந்துவிடும்
காலங்கள்
கரைந்தாலும்
கரைசேராத நதியாய்
தேங்கியபடியேகிடக்கிறது
என் காதல்
உன்னால்காதல் எனும் வானத்தில்
நாமிருவரும்பறந்து திரிந்த காலங்களை
எண்ணியபடியேசிறகுகள் இன்றி
தனிமரமாய் இன்று நான்.
என் காதல்
உன்னை மட்டும் காதலிக்ககற்றுத்தரவில்லை.
உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது
என்பதையும்தான் கற்றுத்தந்தது உன்
இரவுகளின் தாலாட்டு
எது என்பதைநானறியேன் .
ஆனால் என் ஒவ்வொருவிடியலின்
ஓசையும் என்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீஎன்னோடஇருந்தபோது
ஒவ்வொரு நாளும்புதுப்பக்கங்களாய் .
இருந்தது
என் வாழ்க்கை என்றுநீ மறந்திருக்கக்கூடும்
உன் இதயத்தை kathalalthan
வாங்கிக் கொண்டேன் yenpathai
anaal நான் மறக்கவில்லை
நீ வார்த்தைகள்எனும் அடியாட்களைக் கொண்டு
என்னை அகதியாய் விரட்டி அடித்ததை .
enro ஓர் நாள் யாரோ
ஒருவனுக்குசொந்தமாகப்போகும்
உன் இதயத்தில்சில மாதங்கள்
வாழ்ந்ததில் chanthoochappataalum
உன் இதயத்தில் தொடர்ந்து
வாழவாய்ப்பில்லாமல் poonathaivit
உன் இதயத்தில் நான் இறக்காமல்போனதில்
கவலைதான் எனக்குஉன்னால் என் தனிமைக்கு
மிஞ்சியிருப்பதுஎன் பேனா மட்டும்தான்
பாவம் அது நான்அழுதால்
உடனே அழ அரம்பிக்கிறது .
இருவரில்யார் அழுதாலும்
உன்னால் குறையப் போவது
enkal ayulthaan paavappattavaan
கைக்கு விலைபோனபேனா
படாதபாடுபடத்தானே veentum .
inrru என்னைவிட
என் பேனா அதிகமாகஅழுகிறது
பாவம் நான்
எனக்கிருக்கும்உறவை அழவிட்டு விட்டு
என்ன செய்யப்போகிறேன் .
எனவே உனக்கு சொல்லவந்ததை
சொல்லிவிடுகிறேன்இறந்து போன -என்
காதலைஎரிக்க மனமின்றி
என்னைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
eriththuu வருகிறேன்முடிந்தால்
நான் இறந்த மூன்றாம் நாள்வா
காதல் சாம்பலோடு
என்னை சேர்த்துஅள்ளலாம்.
dina

அகதி

அகதி
என் இனத்தை அலட்சியமாய்
என் நிறத்தை
அருவருப்பாய்பார்க்கும்
இந்நாட்டு மக்கள்.
பொன்னகை மேனியில் மின்னியபோதும் -கையில்
சுமையோடும்நெஞ்சில் வலியோடும்
புன்னகை தேடி அலையும் -என்
இனத்தமிழர்கள்
ஓய்வின்றி உறக்கமின்றி
உழைத்த ஊதியத்தை
உறிஞ்சி எடுக்கும்
வரிகளின் வலிகள்
தமிழன் என்ற இனம் .
உலகிளிருப்பதை
எப்போதாவது
திவிரவாதிகளாய்
யபகபடுத்தி கொள்ளும்
ஊடகங்கள் .
தமிழின உணர்வுகளை
வெளிப்படுத்திக்கொன்டால்
சிறைப்பிடித்துசித்திரவதை செய்யும்சட்டதிட்டங்கள் .
இப்படியாக என் சந்தோஷவேர்கள்
அறுந்தபடிவாழ்ந்திடும் நான்
இந்நாட்டில் அகதி!

Monday 16 June 2008

பூக்கள் உதிருமா
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்.

கனவுகள் பூக்கும் நேரம்
கனவுகள் பூக்கும் நேரம் ...
கவலைகள் மறக்கும் நேரம் ...
இதயத்தை பூட்டி வைக்காமல் ...
இமைகளை மட்டும் பூட்டி வைப்போம் ;;;
விடியும் வரை ......
kuruvi

Monday 26 May 2008

எங்கே நீ
காற்றாக வந்தாய்
தேனாக சுவைத்தாய்
தேடுகின்றது என் கண்கள்
எங்கே உன் குரல் என்று.
மனது அலைமோதுகின்றது.
தொலை பேசி அடித்தால்
நீ தான் என்கின்றது.
ஈமையிலில் தேடினேன்உனைக்
காணவில்லைஎங்கே ..நீ.
கால்கள் தடுமாறவாட்டியது உன் நினைவு.
உன் இதயத்தில் நான் வாழ்வேனாபுரியவில்லை.
காத்திருந்து காத்திருந்து.
கசந்து போனது நம் காதல்.
நேரமும் காலமும் கிடைத்தால்நானே வருவேன் உன்னிடம்.
dina

என் கவிதைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
நானேஉதிர்த்து வைக்கும்
என்உயிர்த் துளிகள
வாழ்க்கையின் வாசலிலே
இரத்தப் புள்ளியிட்டு
நரம்புக் கோடுகளால்வரைந்த
கோலங்கள்.
என் இதயத்தைச்செய்தவளின்
பார்வைகள்.
மனிதனாய்ப் பிறந்தகுற்றத்திற்காய்
என் மீதுநானே நடத்திக் கொண்டவிசாரணைகள்
இருளைக் கொல்ல
விரலில் கொளுத்தியநெருப்பு
வேதனை மழையில்நான்
விரித்துப் பிடித்தத்தீக் குடைகள்.